It’s a medical miracle – (M) பயப்பட ஒண்ணும் இல்லை. படத்தின் பெயரே அதுதான். அதைப் பார்த்த பிறகு நமக்கு ஒன்றும் ஆகாமல் இருப்பதும் நிஜமாகவே medical miracle தான்.
இந்த ரீல்ஸ் வந்தாலும் வந்தது, நல்ல காட்சிகளை மட்டும் போட்டு நம்மை ஏமாற்றி விடுகிறார்கள். இரண்டு காட்சிகளை ரீல்ஸில் பார்த்துவிட்டு, “அடடா, இந்தப் படத்தை miss செய்துவிட்டோமே” என்று பார்த்தேன். அந்த ரீல்ஸின் கமெண்ட்டிலேயே பலர் ஆஹா ஓஹோ என்று சொல்லியிருக்க, இருவர் மட்டும் காறித் துப்பியிருந்தார்கள். அந்த இருவரை நம்பாமல், நிறையப் பேரை நம்பியதுதான் நான் செய்த தவறு.
படத்தின் தொடக்கத்திலேயே, “இதுதான் கதை” என்று லாஜிக்கே இல்லாத ஒரு விஷயத்தை நம்பச் சொல்கிறார்கள். சரி, மின்னல் முரளி போல யோசித்திருக்கிறார்கள் என நினைத்தேன். படத்திலும் அந்த அந்த reference-ம் அங்கங்கே வரத்தான் செய்தது. ஆனால் அந்த லாஜிக்கை அவர்கள் வசதிக்கு மாற்றிக்கொண்டார்கள். என்ன எளவுடா இது என்று பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அடுத்த ஒரு மணி நேரம் கொஞ்சம் விறுவிறுப்பாகவே இருந்தது. குறிப்பாக, ஷராஃபுதின் மற்றும் ஹீரோ சங்கீத பிரதாப்பின் நடிப்பு பிரமாதம். படம் மெல்ல காமெடியிலிருந்து மாறி, கொஞ்சம் serious tone-க்குள் போகவும் நிமிர்ந்து உட்கார்ந்தேன். அதுதான் நான் செய்த தவறு.
அதற்குப் பிறகு, அந்தப் படம் கடைசி ஒரு மணி நேரம் சாவடித்து விட்டது. நேரம் இருப்பவர்கள், பதைபதைக்க வைக்கும் சில காட்சிகளுக்காகவும் இரண்டு நடிகர்களின் நடிப்புக்காகவும் பார்க்கலாம். மற்றவர்கள் அந்தப் பக்கம் ஒதுங்கி விடாதீர்கள்.


