Baththa

பத்தா – முதலில் பிளஸ் பாயிண்ட்களாகச் சொல்ல வேண்டுமென்றால், படத்தில் தேவையற்ற வன்முறைகள், 18+ காட்சிகள் எல்லாம் இல்லாமல், எல்லாரும் பார்க்கும்படியாக இருக்கிறது. விஜய் சேதுபதிக்கு மனைவியாக வரும் கதாபாத்திரமும் மகளும் மிகவும் பிரமாதமாக நடித்திருக்கிறார்கள். அதேபோல, அந்தத் திருநாவுக்கரசு கதாபாத்திரமும் மனைவியும் யதார்த்தம். அந்தப் பையனைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். கலக்கிவிட்டான். விஜய் சேதுபதி பல இடங்களில் நன்றாக நடித்திருந்தாலும், சில இடங்களில் ஓவர் ஆக்டிங். ஆனால் இப்படியொரு திரைப்படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டதற்காகவே அவரைப் பாராட்ட வேண்டும். இவையெல்லாம் நிச்சயம் பிளஸ்.

மைனஸ் என்றால் இது ஒரு சிறிய படத்திற்கான கதைக்கரு. இதை இத்தனை நீண்ட படமாக எடுத்ததில் அலுப்பு தட்டுகிறது. அதிலும் குறிப்பாக கடைசி அரை மணி நேரம் படத்துக்கும் கதைக்கும் சம்பந்தமே இல்லை. அதை நம்மைப் பார்க்க வைத்தது நிஜமாகவே தலைவிதி என்றுதான் சொல்ல வேண்டும். படம் அநியாயத்திற்கு மெல்லப் போகிறது. பல காட்சிகள், பின்னால் வரப்போகும் காட்சிகளுக்கு ஒரு ஒட்டு தர வேண்டும் என்பதற்காகவே முன்னால் திணிக்கப்பட்டவை.

ஆனால் எத்தனையோ நாள்களுக்குப் பிறகு இத்தனை குறைவான பட்ஜெட்டில்—விஜய் சேதுபதியின் சம்பளத்தைக் கழித்துவிட்டால்—இப்படி ஒரு திரைப்படம் எடுத்திருப்பதைப் பாராட்ட வேண்டும். ஆனால், இது போன்ற ஒரு திரைப்படம் வந்ததே இல்லை, இது ஒரு கிளாசிக், இது ஒரு அனுபவம் என்பதெல்லாம் ஓவர் ஹைப்ட்.

ஓடிடியில் பார்க்கலாம்.

Share

Comments Closed