அன்பே டயானா – சுமாரான திரைப்படம். லோ கிளாஸ் காமெடித் திரைப்படம் போல வளவளவென்று பேசியே கழுத்தறுத்து விட்டார்கள். குறிப்பாக, பரிதாபங்கள் கோபி படத்தைத் தனியாளாகக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி விட்டார். ஹீரோ பாரி மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். கதாநாயகி மிக அழகு. பெரிய அளவில் ஜெயிப்பார். ரோஜா சேத்தன் அருமை. கடைசியில் கொஞ்ச நேரம் ஏதோ கொஞ்சம் பரவாயில்லை. சில காட்சிகள் சிரிக்க வைத்தன. நேரம் போகாமல் தவிப்பவர்கள் மூளையைக் கழட்டி விட்டுப் பார்க்கலாம். பார்க்காவிட்டால் நஷ்டம் ஒன்றும் இல்லை. ஜமா எடுத்த இயக்குநரின் அடுத்த படம் இத்தனை தட்டையாகச் சம்பந்தமே இல்லாமல் பைத்தியக்காரத்தனமாக இருந்திருக்கத் தேவையில்லை. ஒரே ஆறுதல் படம் முழுக்க வரும் அழகான தெலுங்கு. பலமுறை நான் யோசித்திருக்கிறேன், ஏன் தமிழ்த் திரைப்படங்களில் இங்கேயே தமிழர்களாக வாழும் தெலுங்கு, கன்னட, மலையாள மக்களின் மொழி வருவதில்லை என. அந்தக் குறையை இந்தப் படம் முதன்முறையாக ஓரளவு போக்கியிருக்கிறது.


