Dridam

த்ரிடம் (M) – உச்சரிப்பு சரியா எனத் தெரியவில்லை. சுமாரான படம். கடைசி 20 நிமிடங்களில் மிரட்டி இருக்கிறார்கள் என்று பலர் சொல்லி இருந்தார்கள். உண்மையில் ஆரம்பக் காட்சிகள் மிக மெதுவாகப் போனாலும் அதில் ஒரு இயல்புத்தன்மையும் நம்பகத்தன்மையும் இருந்தன. அதை ஒரே நொடியில் மாற்றி, பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே அந்தக் காட்சி அமைக்கப்பட்டது போல் இருந்தது. அந்த காட்சியும் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு அவ்வளவு தானா என்று தோன்றி விட்டது.

மொத்தத்தில் படம் படு சுமார். தேவையற்ற பல காட்சிகள். பார்வையாளர்கள் தவறாக நினைக்க வேண்டும், உண்மையைக் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காகவே வலிந்து திணிக்கப்பட்ட பல சம்பவங்கள்.

ஒரே ஒரு உருப்படியான விஷயம், ஷேன் நிகம்மின் நடிப்பும், நல்ல போலீசாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் ஒருவரின் நடிப்பும்.

ஷேன் நிகம்மின் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். சில முக்கியமான படங்கள் நடித்திருக்கிறார். இவரது இன்னொரு படம் இன்னும் பார்க்காமல் இருக்கிறது. அதை எப்படியாவது இன்றோ நாளையோ பார்க்க வேண்டும். பார்த்து விட்டுச் சொல்கிறேன்.

Share

Comments Closed