விஸ்வநாதன் & சன்ஸ்
நான் மிக மோசமாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். அத்தனை மோசமில்லை.
நான் சொல்வது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். சில 18+ வசனங்களையும் தாண்டி, இது ஒரு நல்ல குடும்பப் படம்தான்.
ஆனால், படத்தில் சில பிரச்சினைகள் இருக்கின்றன.
முதலாவது, சூர்யாவுக்கு நடிக்கவே வரவில்லை. சிவகுமாருக்குப் போட்டியாக எல்லாக் காட்சிகளிலும் உம்மென்று இருக்கிறார்.
இரண்டாவது, மம்தா பைஜு. நிகரற்ற அழகு. க்யூட். சமந்தாவுக்கு அடுத்து தமிழ் சினிமா கண்டிருக்கும் மிகச் சிறந்த அழகிகளில் ஒருவர். மலையாளப் படங்களில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் அவரைத் தமிழில் இப்படி ஓவராக்ட் பண்ண வைத்திருப்பது பெரிய கொடுமை. அவர் இதில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால், தமிழ்த் திரையுலகம் அவரைப் பாழாக்கிவிடும்.
மூன்றாவது, ராதிகா மண்டையைப் போட்ட பிறகு வரும் காட்சிகள் அனைத்துமே படு அபத்தம். ஏன்டா இந்தத் திரைப்படத்தைப் பார்க்கிறோம் என்ற எரிச்சலே வந்துவிடுகிறது. டப்பிங் படம் பார்ப்பது போன்ற பிரமை.
ஆனால், ஒட்டுமொத்தமாக ஒரு இந்தித் திரைப்படம் பார்ப்பதைப் போன்ற ஃபீலைக் கொண்டு வந்துவிட்டார்கள்.அத்தனை ரிச்நெஸ்.
சூர்யாவுக்குப் பதிலாக வேறு ஒருவர் நடித்திருந்தால், படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
ஆனால், படத்தில் பாராட்டப்பட வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. இறுதியில் இருவரும் சேர்ந்துவிட்டார்கள் என்று காட்டி வயித்தெரிச்சலைக் கொட்டாமல், மிக டீசன்ட்டாக – ரொம்பவும் இழுத்துச் சாவடித்து – முடித்திருக்கிறார்கள்.
ஓரளவு பார்க்கக்கூடிய ஒரு திரைப்படம்தான் இது.


