சில விநோதமான கனவுகள் வந்தபடி இருக்கின்றன. ஏன் வருகின்றன என்பதை யூகிக்கக் கூட முடியவில்லை. பல கனவுகள் காலை எழுந்ததும் மறந்துவிடுகின்றன. அந்தக் கனவு நிகழும்போது மறுநாள் எழுந்ததும் அனைவரிடமும் சொல்லவேண்டும் என நினைத்துக்கொள்வேன். ஆனால் மறுநாள் கனவோ அல்லது நான் அப்படி நினைத்ததோ எதுவுமே ஞாபகம் இருக்காது. ஏதோ ஒரு சமயத்தில் ஒரு மின்னலைப் போல அக்கனவு நினைவுக்கு வரும். நாளாவட்டத்தில்
துபாய் பாபா
பாபா 2002 ஆகஸ்ட் 15ல் இந்தியாவில் வெளியானது. அந்த மே மாதத்தில் நான் துபாயில் இருந்து இந்தியாவுக்கு விடுமுறைக்கு வந்திருந்தேன். பாபா பாடல்கள் வெளியானதும் பாபாவின் பாடல்களை மனப்பாடம் ஆகும் அளவுக்குக் கேட்டேன். அப்போதுதான் எனக்கு ஒரு பெண்ணைப் பார்த்து நிச்சயம் மாதிரி செய்து வைத்திருந்தார்கள். அங்கே இருந்த ஐம்பது நாள்களும் ஒரு நாள் விடாமல் அவளுடதான் ஊர் சுற்றல். மீண்டும் துபாய்
Swasam Subscription Scheme – SSS
சுவாசம் சந்தா திட்டம் – SSS – Swasam Subscription Scheme தினந்தோறும் புத்தகத் திருவிழா எப்போது புத்தகம் வாங்கினாலும் 15 முதல் 20% தள்ளுபடி வேண்டுமா? இன்றே இணைவீர் – சுவாசம் சந்தா திட்டம் – SSS மேலதிக விவரங்களுக்கு: 8148066645 (ஜி பே எண்ணும் இதுதான்.) இத்திட்டத்தில் இணைய கூகிள் ஃபார்ம் லின்க் கமெண்ட்டில் தரப்பட்டுள்ளது. நிபந்தனைகள் • இத்திட்டத்தில்
மயானம்
மயானம்
–ஹரன் பிரசன்னா
எரியும் சிதையின் வெப்ப மிகுதியால்
புலம் பெயர்கின்றன
எறும்புகள்
எங்கோ அழுகிறது
ஒரு காகம்.
யாருடைய சாவுக்காய்?
மரங்கள் தனித்தில்லை.
நெருப்பில் முறுக்கேறும்
எலும்புகளை அடிக்க
உருட்டுக் கட்டையுடன்
எப்போதும் சிரித்திருக்கும்
வெட்டியான் துணைக்கு உண்டு.
வராட்டி மலிவு என்கிறான்
கொள்ளி வைத்தவன்
தூரத்தில் சலசலக்கும்
ஆற்றில் தலை முழுகத்
திரும்பிப் பார்க்காமல்
நடக்கிறேன்,
மண் குளிரும்போது
எறும்புகள் மீளும் என்ற நினைவுடன்.