Palliyezhuchi Paavai Paadalgal

இளையராஜா எழுதி அவர் ஆர்கெஸ்ட்ரேஷனில் சஞ்சய் சுப்ரமணியன் இசையில், பள்ளியெழுச்சிப் பாடல்கள் சில கேட்டேன். இதுவரை இளையராஜா எழுதிய எத்தனையோ பாடல்களைக் கேட்டிருக்கிறேன். ஏன் இளையராஜா நல்ல மெட்டுக்களுக்கெல்லாம் பாடல் எழுதுகிறார் என்று தோன்றியதுண்டு. ஆனால் அவையெல்லாம் வேறு ஜாதி. பள்ளியெழுச்சிப் பாடல்கள் நிஜமாகவே வேறு ஜாதி. இப்படி அவர் எழுதியிருப்பது சத்தியமாக இறைச் செயலன்றி வேறில்லை. நம்பவே முடியவில்லை. அப்படி ஒரு தமிழ். இசையும் வரிகளும் அருமை. கேட்டும் போது அப்படியே பழம்பெரும் ஒரு சிவன் கோவிலுக்குள் (நெல்லையப்பர் கோவில் போன்ற ஒன்றுக்குள்) நுழைந்த உணர்வு ஏற்படுகிறது.

Share

Comments Closed