Archive for ஹரன் பிரசன்னா

ஞாநி, அ.மார்க்ஸ், மோதி, படேல், தி தமிழ் ஹிந்து

படேலின் இறுதி ஊர்வலத்தில் நேரு கலந்துகொள்ளவில்லை என்று மோதி சொன்னதாகவும் அது தவறான செய்தி என்றும் ஒரு கருத்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதைக் கடுமையாக விமர்சித்து ஞாநி ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடிருந்தார். இன்றைய தமிழ் தி ஹிந்துவில் அ.மார்க்ஸும் இதைப் பற்றி மிகவும் எள்ளலாக ஒரு வரி குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இப்படி மோதி சொல்லவே இல்லை. அப்படிச் சொன்னதாக செய்தி வெளியிட்ட திவ்யபாஸ்கர் தினசரி தான் சொன்னது தவறு என்றும் சொல்லிவிட்டது. தவறாகச் சொன்னதை ஒப்புக்கொண்டுவிடும்போது சொன்ன தவறு சிறியதாகிப் போய், பெருந்தன்மை மேலெழுந்துவிடுகிறது. ஆனால் இதே தவறை மீண்டும் மீண்டும் சொல்லி அதை உண்மையாக்கப் பார்க்கிறார்கள். தி தமிழ் ஹிந்து நாளிதழ் வரை இந்தப் பொய் பிரசாரம் வந்தாகிவிட்டது. இனி சில வருடங்கள் கழித்து  இதுவே அதிகாரபூர்வ செய்தியாகிவிடும். மீண்டும் மீண்டும் இதையே நிரூபணமாகக் காட்டுவார்கள்.

மோதி வெற்றிபெற்றுவிடுவாரோ என்னும் பயம் இவர்களையெல்லாம் எப்படி ஆட்டுவிக்கிறது பாருங்கள்.

ஞாநியின் ஃபேஸ்புக் பக்க ஸ்டேட்டஸின் லின்க்: https://www.facebook.com/gnani.sankaran/posts/10201577288946767

அ.மார்க்ஸ் தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில் மூஞ்சாவைப் பற்றி அவன் இவன் என்று ஏக வசனத்தில் குறிப்பிட்டிக்கிறார். பேராசிரியரின் மொழி இது. ஹிந்துத்துவர்களும் இப்படிப் பேசுவது உண்டு. நான் இல்லை என்று பொய் சொல்லமாட்டேன். நிச்சயம் ஹிந்த்துத்துவர்கள் இப்படிப் பேசுவது அநாகரிகம். ஆனால் இந்த அநாகரிகத்தை உலகமே கண்டுபிடித்துச் சொல்லும். திட்டும். ஆனால் அதே உலகம், அ.மார்க்ஸ் போன்ற பேராசிரியர்கள் இப்படிப் பேசும்போது கள்ளமௌனம் சாதித்துவிட்டுக் கடந்து செல்லும்.

இந்த ஃபேஸ்புக் இடுகையில், மூஞ்சே முசோலினியைப் பார்த்துவிட்டுப் பாராட்டியதாகச் சொல்லியிருக்கிறார் அ.மார்க்ஸ். கள்ள மௌனத்துக்கு இன்னொரு உதாரணம் இந்த இடுகை. அ.மார்க்ஸ் பாராட்டும் காந்தியாரும் முசோலினியைப் பார்த்து, முசோலினியைப் பாராட்டியிருக்கிறார். இதே அளவுகோலில் காந்தியாரை ஏன் அ.மார்க்ஸ் அவன் இவன் என்று பேசவில்லை? இத்தனைக்கும் காந்தி முசோலினியைச் சந்திக்கக்கூடாது என்றெல்லாம் கோரிக்கைகள் எழுந்தன. அத்தனையையும் புறக்கணித்திருக்கிறார் காந்தி. அதோடு முசோலினியைப் பாராட்டியும் இருக்கிறார் காந்தி. எப்படி முசோலினியைப் பாராட்டலாம் என்று கேட்கப்பட்டபோது, வன்முறைக்காக முசோலினியை எதிர்க்கவேண்டும் என்றால் ஒட்டுமொத்த ஐரோப்பாவையும்தானே எதிர்க்கவேண்டும் என்ற ரீதியில் பதில் சொன்னாராம் காந்தி. (இது பற்றிய ஆதாரங்களை நண்பர்களிடம் கேட்டிருக்கிறேன். கிடைத்ததும் உள்ளிடுகிறேன்.) காந்தியார் உட்பட இரண்டாம் வட்டமேஜை மாநாட்டுக்குச் சென்ற அனைவரும் முசோலினியைச் சந்தித்திருக்கிறார்கள். இன்று மோதியைக் கட்டம்கட்ட எங்கே இருந்து எப்படி வரலாற்றை திரித்துக்கொள்கிறார்கள் பாருங்கள்.

அ.மார்க்ஸின் ஃபேஸ்புக் இடுகைக்கான லிங்க் இங்கே.

நேருவை மோதி வெறுப்பதில் என்ன வியப்பு கட்டுரை லின்க் இங்கே.

டிவிட் லாங்கர் லின்க்: http://www.twitlonger.com/show/msqcbi

 

gnani facebook status

amarx facebook status

twit longer image

Share

கருணாநிதியின் கண்ணியம்

கருணாநிதி ஜெயலலிதாவைப் பற்றி இப்படிப் பேசியிருக்கிறார். ஜெயலலிதா என்ன பேசினார் என்று தெரியவில்லை. அதுவும் இதுபோன்ற ‘கண்ணியத்துடன்’ இருந்தால் அதையும் இங்கே பகிர்வேன். பொதுவாக ஜெயலலிதா அடிக்கடி கண்ணியக்குறைவாகப் பேசுபவர் அல்ல. அவர் கண்ணியம் தவறிப் பேசியது என்று யோசித்துப் பார்த்தால், சென்னா ரெட்டியைப் பேசியது நினைவுக்கு வருகிறது. வேறு ஏதேனும் இருந்தால் இங்கே கமெண்ட்டில் சொல்லவும். கருணாநிதி பேசிய கண்ணியமற்ற வரிகளைத் தொகுத்தால் ஒரு புத்தகமே போடலாம் என்று நினைக்கிறேன்.

பெண்ணென்றால் என்னவும் பேசலாம் என்பதை இதில் பார்க்கிறேன். நடிகைகளுக்கு மட்டுமல்ல, முதலமைச்சரே ஆனாலும் பெண்ணென்றால் இளக்காரம்தான். பெண்ணிய செலக்டிவ் அறச்சீற்றங்களில் இது வராது என்பது கூடுதல் தகவல்.

கருணாநிதி ஃபேஸ்புக்கில் எழுதியது:

நாடாளுமன்றத் தேர்தல் வரப் போகிறது என்ற செய்தி வந்தாலும் வந்தது; நடுத்தெரு நாராயணியாம் ஜெயலலிதாவுக்கு """"நடுங்கா நாக்கழகி"" என்று பட்டமும் பதக்கமும் கிடைக்க வேண்டுமென்ற நப்பாசையோடு யாரைப் பார்த்துக் குரைக்கலாம், எவரைத் தாக்கிக் கடித்துக் குதறலாம் என்ற வெறி பிடித்து விட்டது.

ஃபேஸ்புக் லிங்க்: https://www.facebook.com/Kalaignar89/posts/672757329403142

ஸ்கிரீன் ஷாட்:

ஜெயலலிதாவின் இந்த அறிக்கையைத் தொடர்ந்தே கருணாநிதி இப்படிப் பேசியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

https://www.facebook.com/permalink.php?story_fbid=712695455427166&id=182480735115310

Share

துரோகி மைனாரிட்டிகள் – ஈவெரா

துக்ளக்கில் 83 வாரங்களாக வெளிவரும் திராவிட மாயை ஒரு பார்வை பகுதியின் இந்த வார கட்டுரை இங்கே. ஈவெரா தேவைப்பட்டால் எப்படி வேண்டுமானாலும் பேசுவார் என்பதற்கு இது இன்னுமொரு எடுத்துக்காட்டு.

 
நன்றி: துக்ளக்

இதுபோல் அவர் ‘பறச்சிகளெல்லாம் ரவிக்கை போட ஆரம்பிச்சா துணிப்பஞ்சம் வந்திராதா’ என்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்! அந்தப் பேட்டியின் சுட்டி கிடைத்தால் இங்கே சேர்த்து வைக்கிறேன். இதுகுறித்து முரசொலி வெளியிட்ட கார்ட்டூனை (வெசாவின் கட்டுரையில்) இங்கே படிக்கலாம்.

Share

அபிலாஷின் உளறல்கள்

உயிரோசையில் வெளியான அபிலாஷின் கட்டுரை இங்கே: 

அபிலாஷின் கிறுக்குத்தனமான கட்டுரை. சரோஜாதேவியில் வரக்கூட லாயக்கற்ற கட்டுரை இது. அங்கங்கே ஆய்வு போன்ற முலாம் பூசி உளறிக்கொட்டும் இந்தக் கட்டுரை சொல்வது என்ன?

* இஸ்லாமியர்களின் அதிக நேரம் உடலுறவு கொள்வார்கள்.

* ராமசேனையினர் வாலை உறவுக்குப் பயன்படுத்தலாம்!

* இஸ்லாமியர்களின் குழந்தைகளே அப்பாவைப் போன்ற சாடையில் உள்ளன.

* உடலுறவின்போது நிகழும் குறியின் இயக்கம், கள்ள உறவின் விந்துவை வெளியேற்றுவதே.

இத்தனை உளறல்களையும் உளறிவிட்டுக் கடைசியில் நம சிவாய என்று முடித்திருக்கிறார்.

முன் தோல் நீக்கத்தைத்தான் சொன்னேன், இஸ்லாமியர்களையா சொன்னேன் என்று மேலும் உளறமாட்டார் என்றே நம்புகிறேன்.

இந்த கேடுகெட்ட்ட கட்டுரையை அபிலாஷ் எழுதினார் என்பது எனக்கு மகிழ்ச்சி தரும் விஷயம்தான். ஏனென்றால் அபிலாஷின் கட்டுரை உளறல்களுக்கு ஓர் அளவில்லை என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு.

இன்னொரு விஷயம், ஜெயமோகன் இவரது படைப்புகளை ஊனத்தை வைத்து எடைபோட்டார் என்ற ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் கட்டுரையிலும் தன்னை நொண்டி என்று கூறியிருக்கிறார். தேவையே இல்லாத சுய பச்சாதாபம் இங்கே ஏன் வந்தது? இந்த பச்சாதாபத்தை அவரது படைப்புகளைக்கொண்டு மிகச்சரியாக ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்கள் ஊடுருவினால் ஓட ஓட வசைபாடுவது. இதுதான் அபிலாஷ்.

Share

மறக்கப்பட்ட 1949 வாக்குறுதி கட்டுரையை முன்வைத்து

இன்றைய (15-அக்டோபர்-2013) தமிழ் தி ஹிந்துவில் வித்யா சுப்ரமணியம் எழுதிய ஆர் எஸ் எஸ் குறித்த கட்டுரை வெளியாகியுள்ளது. மோசமான கட்டுரை. படேலிடம் ஆர் எஸ் எஸ் வாக்குக் கொடுத்ததாம். என்னவென்று? அரசியலில் பங்கேற்காது என்று. அதனால்தான் ஆர் எஸ் எஸ்ஸின் தடை நீக்கப்பட்டதாம். அப்படி இருக்கும்போது இப்போது எப்படி அரசியலில் பங்கேற்கலாம் என்று கேட்கிறது கட்டுரை. இப்போது ஆர் எஸ் எஸ் என்ன பங்கெடுத்தது? மோதியின் பிரதம வேட்பாளர் அறிவிப்பில் ஆர் எஸ் எஸ்ஸின் பங்கு இருக்கிறதாம்.

* இத்தனை நாளாக ஆர் எஸ் எஸ் பிஜேபியின் நடவடிக்கைகளில் பங்கேற்கவில்லை என்று வித்யா சுப்பிரமணியம் நம்புவது வேடிக்கை. இப்போதைப் போலவே எப்போதும், நேரடியாகவா மறைமுகமாகவா என்று சொல்லமுடியாத வண்ணம், ஆர் எஸ் எஸ் பாஜகவில் தன் அதிகாரத்தைச் செலுத்தியே வந்திருக்கிறது.

* ஆர் எஸ் எஸ் தன் அதிகாரத்தை பாஜகவிலிருந்து விலக்குமானால் நான் பாஜகவை மற்றுமொரு சாதாரணக் கட்சியாகவே பார்ப்பேன். அத்தனையையும் மீறி பாஜவை ஓரளவு நான் நம்பக் காரணம் இந்த ஆர் எஸ் எஸ் அதிகாரமே. பாஜகவில் இருக்கும் ஆர் எஸ் எஸ் தொண்டர்களே கட்சியின் தூண்கள். 

* படேலிடம் வாக்குக் கொடுத்துவிட்டார் என்று பலமுறை வித்யா சுப்ரமணியம் கிட்டத்தட்ட கதறியிருக்கிறார். படேல் மேல் அத்தனை மதிப்பா? சரி ஒழியட்டும். அன்று வாக்குக் கொடுத்துவிட்டால், அதன் பின்பு ஆர் எஸ் எஸ் தன் நிலையிலிருந்து மாறவே கூடாதா என்ன? 

* படேலிடம் வாக்குக் கொடுத்ததைச் சொல்லும் வித்யா சுப்ரமணியம், ஆர் எஸ் எஸ் தன் தொண்டர்களை கட்சிகளில் இணைந்து பணியாற்ற அனுமதித்தது என்றும் சொல்கிறார். அப்புறம் என்ன? கட்சிகளில் சேர்ந்து பணியாற்ற அனுமதிப்பது என்பது கைதட்டிக்கொண்டிருக்கவா? அதிகாரத்தைச் செலுத்தத்தானே!

* கோல்வல்கர் அதிகாரத்தின் மேல் வெறுப்பு உள்ளவராக இருந்தார். எனவே அவர் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருந்தார். ஆனால் அப்போதே அரசியலில் நேரடியாகப் பங்குபெறவேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கத்தான் செய்தன. தேவரஸ் இதனை முக்கியமான விஷயமாகவே பார்த்தார். எனவே இது புதிய கண்டுபிடிப்பல்ல.

* கோல்வல்கர் மன்றாடினார் என்றொரு எள்ளல். உண்மையில் அவர் மன்றாட மட்டும் செய்யவில்லை. மிகக் கடினமான காலகட்டத்தில் ஆர் எஸ் எஸ் என்ற இந்தியாவின் உன்னத அமைப்பை வழி நடத்தும் அவருக்கு தன் காரியம் ஒவ்வொன்றும் எத்தனை முக்கியமானது என்று தெரிந்திருந்தது. எனவே அரசுக்கு உகந்தமொழியில் சொல்லிப் பார்த்தார். பின்பு வேறு வழியில்லை என்றால் ஆர் எஸ் எஸ் அரசியலில் நேரடியாகப் பங்குபெற வேண்டியிருக்கும் என்ற முடிவை நோக்கி ஆர் எஸ் எஸ் செல்வதைப் பார்த்து பயந்த நேரு அரசு தடையை நீக்கியது. ஏன் இந்தப் பயம்? அன்றைய காங்கிரஸில் ஹிந்துமதத்தைப் போற்றிய, தேசியத்தை உயிராக மதித்த பலர் இருந்தனர். எனவே ஆர் எஸ் எஸ் நேரடியாக அரசியல் களத்துக்கு வந்தால் காங்கிரஸை உட்கொண்டுவிடும் என்று நேருவுக்குப் புரிந்திருந்தது. இதைவைத்து விளையாடித்தான் ஆர் எஸ் எஸ் தடையை நேருவிய அரசு நீக்கியது. எனவே மன்றாடுதல் என்னும் வார்த்தை எள்ளலோடு வரலாறு முடிந்துவிடவில்லை. தன் கட்சியைக் காப்பாற்றவே நேருவிய அரசு தடையை நீக்கியது. காந்தி கொலையில் ஆர் எஸ் எஸுக்குப் பங்கிருக்க வாய்ப்பில்லை என்று படேலும் நேருவிய அரசும் உறுதியாக நம்பியபின்பும் ஏன் ஆர் எஸ் எஸைத் தடை செய்யவேண்டும்? இந்த உறுதிமொழியைப் பெறத்தான்.

இத்தனை உண்மைகளைப் புதைத்துவிட்டு ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது.

இதேபோல் சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் வால் பிடித்த கம்யூனிஸ்ட்டுகளின் கணக்குகளுக்குப் பணம் வந்த கதையையும் தமிழ் தி ஹிந்து எழுதவேண்டும்.

இதைப் பற்றிய ஃபேஸ்புக் குறிப்பு இங்கே.

Share

சன் டிவியும் சனிக்கிழமையும்

சன் டிவியிடம் தோற்றுவிட்டேன். கையேந்தி மடிப்பிச்சைதான் கேட்கவேண்டியிருக்கிறது. சனிக்கிழமையும் ஞாயிற்றுக் கிழமையும்தான் நிம்மதியாக இருந்தோம். கடந்த இரண்டு நாள்களாக நிம்மதியில் விழுந்தது இடி. இனி சனி அன்றும் மெகா தொடர்கள் உண்டாம். ஒவ்வொரு சீரியலிலும் நடிகர்கள் வந்து, நாங்க சனிக்கிழமையும் வருவோமே பெப்பே என்கிறார்கள். மிரண்டு போயிருக்கிறேன்.

இருப்பது சிங்கிள் பெட்ரூம் வீட்டில். எனவே மெகா தொடர்கள் பார்ப்பவர்கள் பார்க்கட்டும் என்று வேறு எங்கும் செல்லவும் முடியாது. என் அம்மாவை அடக்கி வைக்கவும் முடியாது. ’காசு கொடுத்துதான் எங்கயும் போகமுடியாது. வீட்ல நேரம் போகப் பார்க்கறதும் ஒனக்கு பொறுக்கலையா?’

என் மாமாவுக்கு காது கேக்காது. எனவே அவர் வீட்டில் அவர் மெகா சீரியல் பார்க்கும்போது டிவி சத்தத்தை மினிம் 70ல் வைத்துத்தான் கேட்பார். அந்தத் தெருவே ம்யூட் செய்துவிட்டு இந்த வசனத்தைக் கேட்டுக்கொண்டே அவரவர்கள் வீட்டில் அதே சீரியலைப் பார்க்கலாம். 

இதிலெல்லாம் இருந்து விடுபடுவது சனிக்கிழமைகளில்தான். அதற்கும் உலை வைக்கிறார்கள் சன் டிவிக்காரர்கள். தயவுசெய்து இந்தக் கொலை முயற்சியை உடனே கைவிடுங்கள். இது நல்லதல்ல. ப்ளீஸ். இதற்குமேல் அழுதுடுவேன்.

Share

மேல்வீடு – சிறுகதை

நான் எழுதிய மேல்வீடு சிறுகதை சொல்வனம்.காமில் வெளியாகியுள்ளது. வாசிக்க இங்கே செல்லவும்.

Share

புதியவர்களின் கதைகள்

ஜெயமோகனின் வலைத்தளத்தில் புதியவர்களின் கதைகள் வெளியிடப்பட்டு, பதினோரு சிறுகதை எழுத்தாளர்கள் ஜெயமோகனால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஜெயமோகன் போன்ற ஒரு மூத்த, முக்கியமான எழுத்தாளரால் இவர்கள் அறிமுகப்படுத்தப்படுவது மிக முக்கியமானது. இதனால் இவர்கள் நிச்சயம் நல்ல கவனம் பெறுவார்கள். ஜெயமோகன் இப்படிச் செய்ய நினைத்ததே, வரும் தலைமுறை மீது அவர் வைத்திருக்கும் ஆர்வத்தினால்தான். இப்படி ஏற்கெனவே பல மூத்தாளர்கள் செய்திருந்தாலும், அவற்றுக்கும் இதற்கும் உள்ள முக்கிய வேறுபாடு, இந்தப் பதினோரு எழுத்தாளர்களும் இணையத்தின் மூலம் எழுத வந்தவர்கள் என்பதே. இணையத்தின் வழியே ஒரு சிறுகதை எழுத்தாளர்கள் தலைமுறை உருவாகிவந்தால், தொடர்ந்து சபிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழ் இணைய உலகம் கொஞ்சம் தலை நிமிரலாம்.

மேலும் வாசிக்க இங்கே செல்லவும்.

Share