குட் பேட் அக்லி – எத்தனையோ குப்பைகளைப் பார்த்திருக்கிறேன். இது குப்பையிலும் குப்பை. இதை தியேட்டரில் பார்த்தவர்கள் நிலை அந்தோ பரிதாபம். ஒரு சீரியஸான காட்சியில் சிம்ரன் வருவதும் இன்னொரு காட்சியில் கிங்க்ஸ்லீ வருவதும் சகிக்க முடியாதவை. இதனால் மற்ற காட்சிகள் சகிக்க முடிந்தவை என்று நினைத்துவிட வேண்டாம். குட் உடைந்து பேட் வந்தாலும் பேட் உடைந்து அக்லி வந்தாலும் படம் தொடக்கம் முதல் இறுதி வரை அக்லிதான். நானும் 5 வருடங்களாக எப்படியாவது அஜித்தைப் பாராட்டிவிட நினைக்கிறேன் வருவதெல்லாம் இப்படியாபட்ட குப்பைகள்தான். கதை திரைக்கதை வசனம் டைரக்ஷன் என எல்லாமே அக்மார்க் குப்பை.
ஏகே என்ற பெயரை எல்லாரும் சொல்கிறார்கள். அதை நீக்கி இருந்தால் அரை மணி நேரம் மிச்சமாகி இருக்கும். அஜித்தைப் புகழ்வதைத் தூக்கி இருந்தால் இன்னும் ஒரு அரை மணி நேரம் மிச்சமாகி இருக்கும். படம் 2 மணி நேரம் மட்டுமே என்பதுவே பெரிய ஆறுதல்.
வாட்ஸப் க்ரூப்பில் அஜித் படத்தைப் பார்த்ததும் வில்லன்கள் விலகுவது மட்டும் மாஸ் காட்சி.