பல்லி வதை
–ஹரன் பிரசன்னா
மரத்தில் ஊர்ந்துகொண்டிருக்கும் பல்லியை
சத்தமில்லாமல் நெருங்கி
கையிலிருக்கும் கல்லால்
ஓங்கி ஒரே அடியில் அடித்து
மரத்தோடு சேர்த்து வைத்துஅழுத்த
தலையின் வழி இரத்தம் பிதுங்க
வால் துடிக்க…
நாசமாப் போறவனுங்கவென்று
குண்டுப்பொம்பளையருத்தி
திட்டுவாள்
எப்போதும்
சிரித்துக்கொண்டே ஓடுவோம்.
பையனுக்குப் பல்லிதோசம்.
காரணம் தெரியவில்லை
பல்லியா குண்டுபொம்பளையாவென.