Tag Archive for நேர்காணல்

கௌதமி – ரங்கராஜ் பாண்டே நேர்காணல்

ரங்கராஜ் பாண்டே கௌதமியுடன் நிகழ்த்திய நேர்காணல் (கேள்விக்கு என்ன பதில், தந்தி டிவி) படு திராபையாக இருந்தது. நேர விரயம். கௌதமிக்குப் பேச எந்த விஷயமும் இல்லை என்பது தெளிவாகப் புரிந்தது. கமல் மீது வைத்த பெரிய குற்றச்சாட்டைப் பற்றிப் பேசாமல் தவிர்த்தார் கௌதமி. 40 நிமிட நேர்காணலில் கௌதமி சொன்னதில் எதுவுமே முக்கியமானதாக இல்லை. மார்பகப் புற்றுநோயை எதிர்கொண்டு வென்றவர் என்ற ஒற்றை (முக்கியமான) விஷயத்தைத் தாண்டி கௌதமி எதையும் சொல்லவில்லை. ஏன் இந்தப் பேட்டி என்பது புரியவில்லை.

இந்தக் கொடுமைகளையெல்லாம் விடப் பெரிய கொடுமை, ரங்கராஜ் பாண்டே கௌதமியை அறிமுகம் செய்தபோது சொன்னது – போராளி. கௌதமி ஏன் போராளி ஆனார் என்பது பாண்டேவுக்கு மட்டுமே தெரியும் என நினைக்கிறேன். புற்றுநோயை எதிர்கொண்டு வென்றதால் போராளி என்று சொன்னாரா எனத் தெரியவில்லை. நம் ஊரில் போராளி என்பதற்கு நிகழ்கால அர்த்தம் ஒன்று உள்ளது. அப்படி இருக்கும்போது கௌதமியை சர்வ சாதாரணமாக போராளி என்றால் அநியாயம்.

40 நிமிடம் கேட்டது (எம்பி3) பெரிய நேர விரயம்.

இன்னும் நான் கேட்கவேண்டிய பேட்டிகள்: நிர்மலா சீதாராமன் – பாண்டே நேர்காணல், சந்திரலேகா ஐஏஎஸ் – ஹரிஹரன் நேர்காணல்

Share