Tag Archive for ஆளுநர்

RN Ravi – The ever best governor of Tamil Nadu

தமிழ்நாடு சந்தித்த மிகச் சிறந்த ஆளுநர் ஆர்.என்.ரவி. முதல் பாராட்டு, தமிழக அரசின் கண்ணில் விரல் விட்டு ஆட்டியதற்கு. இரண்டாவது பாராட்டு, தமிழ்நாட்டு அரசியல் சக்திகள் இந்திய மைய நீரோட்டத்தில் இருந்து விலகுவதுபோல் செயல்பட்டுப் பயமுறுத்தியபோதெல்லாம், அதற்கு தமிழக அரசு துணைபோவது போலச் செயல்பட்டுப் பயமுறுத்தியபோதெல்லாம் அதை இந்தியனாக நின்று எதிர்கொண்டமைக்கு. மூன்றாவது பாராட்டு, பல அவமானங்களைத் தாங்கிக் கொண்டு, அதற்காக ஈகோ மோதலில் இறங்காமல் இருந்ததற்கு. நான்காவது பாராட்டு, தமிழ் மொழியின் மீது உண்மையான ஈடுபாடு கொண்டு, அதற்காக தேசியத்தின்பால் ஈடுபாடுகொண்ட தமிழ் எழுத்தாளர்கள் / மொழிபெயர்ப்பாளர்கள் பலரை நேரம் கிடைக்கும்போதெல்லாம் / நேரத்தை ஏற்படுத்திக்கொண்டு கௌரவித்ததற்கும், தமிழில் செம்மையாகப் பல புத்தக முயற்சிகளை ஆதரித்துக் கொண்டு வந்ததற்கும். ஐந்தாவது பாராட்டு, துணை வேந்தர் விஷயத்திலும், சட்டமன்றம் அனுப்பி வைக்கும் பரிந்துரையை ஆளுநர் எத்தனை நாள் நிறுத்தி வைக்கலாம் என்பதை இந்திய அளவுக்கான சட்டப் பிரச்சினையாக்கியதற்கும். ஆறாவது பாராட்டு, சத்த்மே இல்லாமல் இந்திய தேசிய ஆதரவைப் பல செயல்பாடுகள் மூலம் தன் ஆதிக்கம் உள்ள இடங்களில் எல்லாம் பரப்பியதற்கு.

தைரியமான ஓர் ஆளுநராக தன் பதவிக் காலம் முழுமைக்கும் இருந்தமைக்காக இன்னும் சிறப்பான பாராட்டு.

எங்கிருந்தாலும் இதே போன்ற சிங்கமுகத்துடன் இருக்க வாழ்த்துகள்.

Share