கருணாநிதி ஜெயலலிதாவைப் பற்றி இப்படிப் பேசியிருக்கிறார். ஜெயலலிதா என்ன பேசினார் என்று தெரியவில்லை. அதுவும் இதுபோன்ற ‘கண்ணியத்துடன்’ இருந்தால் அதையும் இங்கே பகிர்வேன். பொதுவாக ஜெயலலிதா அடிக்கடி கண்ணியக்குறைவாகப் பேசுபவர் அல்ல. அவர் கண்ணியம் தவறிப் பேசியது என்று யோசித்துப் பார்த்தால், சென்னா ரெட்டியைப் பேசியது நினைவுக்கு வருகிறது. வேறு ஏதேனும் இருந்தால் இங்கே கமெண்ட்டில் சொல்லவும். கருணாநிதி பேசிய கண்ணியமற்ற வரிகளைத் தொகுத்தால் ஒரு புத்தகமே போடலாம் என்று நினைக்கிறேன்.
பெண்ணென்றால் என்னவும் பேசலாம் என்பதை இதில் பார்க்கிறேன். நடிகைகளுக்கு மட்டுமல்ல, முதலமைச்சரே ஆனாலும் பெண்ணென்றால் இளக்காரம்தான். பெண்ணிய செலக்டிவ் அறச்சீற்றங்களில் இது வராது என்பது கூடுதல் தகவல்.
கருணாநிதி ஃபேஸ்புக்கில் எழுதியது:
நாடாளுமன்றத் தேர்தல் வரப் போகிறது என்ற செய்தி வந்தாலும் வந்தது; நடுத்தெரு நாராயணியாம் ஜெயலலிதாவுக்கு """"நடுங்கா நாக்கழகி"" என்று பட்டமும் பதக்கமும் கிடைக்க வேண்டுமென்ற நப்பாசையோடு யாரைப் பார்த்துக் குரைக்கலாம், எவரைத் தாக்கிக் கடித்துக் குதறலாம் என்ற வெறி பிடித்து விட்டது.
ஃபேஸ்புக் லிங்க்: https://www.facebook.com/Kalaignar89/posts/672757329403142
ஸ்கிரீன் ஷாட்:
ஜெயலலிதாவின் இந்த அறிக்கையைத் தொடர்ந்தே கருணாநிதி இப்படிப் பேசியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.
https://www.facebook.com/permalink.php?story_fbid=712695455427166&id=182480735115310