Extra Decent (M) – தமிழில் பார்த்து பார்த்துப் புளித்துப் போன ஒரு கதை வகை. அதை மலையாளப் பாணியில் எடுத்திருக்கிறார்கள். சூரஜ் வெஞ்சரமூடுவைப் பார்த்து பார்த்துச் சலித்துப் போன நடிப்பிலிருந்து இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது என்பது ஒரு பலம். ஆனாலும் இடையில் பழைய சூரஜ் எட்டி பார்க்கவும் எரிச்சல் ஆகிறது. பின்னர் மீண்டும் ஃபார்முக்கு வருகிறார். முதல் ஒரு மணி நேரம் விறுவிறுப்பாகத்தான் இருந்தது. கதைக்குள் வந்ததும் அதை எப்படிக் கொண்டு போவது எப்படி முடிப்பது என்பதில் இயக்குநருக்குக் குழப்பம் வந்து விட்டது. நம்மைச் சாவடித்து விட்டார். தொடக்கக் காட்சியில் இருந்து சூரஜ் ஒரு கிறுக்கு என்று நாம் தெரிந்து கொள்ளும் வரையிலான இடங்கள் அருமை. அதற்கு பிறகு பார்ப்பது கொடுமை. நேரம் இருந்தால் மட்டுமே பார்த்தால் போதும்.