உங்களுக்கு தொண்டை வலின்னு நியூஸ்ல பார்த்தேன்
நியூஸ்லயா? என்ன சார் சொல்றீங்க?
ரொம்பத்தான் ஓவர் பில்டப் சார் உங்களுக்கு. இதெல்லாமா நியூஸ்ல வரும்? ஃபேஸ்புக்ல பாத்தேன்.
ஓ, சொல்லுங்க சார்
போஸ்ட் பாத்ததும்தான் உங்க ஞாபகம் வந்துச்சி. ஒரு புக் பத்தி சொன்னேனே..
சொல்லுங்க சார்.
நான் எழுதி அனுப்பினா எத்தனை நாளாகும் உங்களுக்கு ப்ரிண்ட் பண்ண.
அனுப்புங்க சார், பாத்துட்டு சொல்றேன்.
சும்மா தோராயமா சொல்லுங்க சார்.
மே மாசம் கொண்டு வரலாம் சார். அனுப்பறீங்களா சார்?
எதை அனுப்பணும்?
புக்?
நான் இன்னும் எழுதவே ஆரம்பிக்கலையே! பெரிய சப்ஜெக்ட் சார். எழுதி முடிக்க ஒரு வருஷம் ஆகும். எழுதி அனுப்பினா எத்தனை நாள்ல வரும்னு தெரிஞ்சிக்கிறதுக்காக கேட்டேன்.
ஓ
அந்த புக்கை இங்கிலீஷ்ல டிரான்ஸ்லேட் பண்ண எவ்ளோ நாளாகும் சார்?
அனுப்புங்க சார், பாத்துட்டு சொல்றேன்.
தோராயமா எத்தனை நாள் ஆகும்? சரி விடுங்க, பாத்துக்கலாம். அப்புறம் சார், தொண்டை வலின்னு போட்டிருந்தீங்கல்ல..
ஆமா…
என்ன என்ன கை வைத்தியமெல்லாமோ சொல்வாங்க. எதையும் செய்யாதீங்க.
ம்
வாயையும் வயித்தையும் புண்ணாக்கிக்கிட்டா யாரு சார் பாப்பா?
ம்
நான் சொல்றதை கேளுங்க.
ம்
ரெண்டு ஓம இலை, ஒரு கிராம்பு எடுத்துக்கோங்க.
எடுத்துட்டேன் சார்
அதுக்குள்ளயா? எப்படி சார்?
நேத்து கமெண்ட்ல வந்த எல்லாத்தையும் வாங்கி ரெடியா முன்னாடி வெச்சிருக்கேன் சார். இருபத்து ரெண்டாயிரம் ரூபா ஆச்சு. எப்படி இதையெல்லாம் காலி பண்ண போறேன்னுதான் தெரியல.
ஏன் சார் எல்லாத்தையும் வாங்கினீங்க? எல்லாம் சுத்த ஹம்பக் சார். ரெண்டு ஓம இலை, ஒரு கிராம்பு, வெறும் வாய்ல போட்டு மென்னீங்கன்னா… ஒலகத்துல இருமலே வராது.
ஓ
ஆமா சார், அமெரிக்கால இதுக்கு காப்பி ரைட் வாங்கப் போறானாம். கண்டுபிடிச்சது நாம, ஆனா காப்பிரைட் அமெரிக்காவுக்கும். அமெரிக்காவை ஆப்படிச்சாத்தான் சார் இந்தியா வல்லரசாகும்.
ம்.
அப்புறம் இன்னொரு விஷயம். தொண்டை வலி வெச்சிக்கிட்டு யாருகிட்டயும் ரொம்ப பேசாதீங்க சார்.
ஓகே சார்
சும்மா ஓகேன்னு சொல்லிட்டு, இப்ப என்கிட்ட பேசின மாதிரி பேசிக்கிட்டே இருக்காதீங்க சார். புக் ஒரு வருஷம் கழிச்சி வரப் போகுது, அதுக்கு எதுக்கு இப்பவே இத்தனை டிஸ்கஷன்? வெச்சிடறேன் சார்.