18ம் படி (ம) – வெறித்தனமான படம் என்பார்களே, அது இந்தப் படம்தான். நல்ல படம் என்றெல்லாம் சொல்ல முடியாது. இரண்டு பள்ளிகளை ரௌடி கேங்க் போல மாற்றி, எப்படி எப்படியெல்லாமோ சீன் யோசித்து, ஒரு ஃபீல் குட் முவீயாக வந்திருக்க வேண்டியதை, மிரட்டி இருக்கிறார்கள்! மலையாள திரைப்பட கமர்ஷியல் வெறியர்களுக்கான படம். நல்ல மலையாளத் திரைப்பட ஆர்வலர்களுக்குப் பிடிக்காது என்றே நினைக்கிறேன். நேரமும் பெரிய பொறுமையும் இருப்பவர்கள் பாருங்கள். படம் முழுக்க ஜெகஜெகவென நடிகர்கள் பட்டாளம்! ஒளிப்பதிவு அட்டகாசம்.


