நாள் 2
எப்போதோ படித்த புத்தகம். மீண்டும் கண்ணில் பட, வாசித்தேன்.
பிரமாண்டமல்ல, எளிமையே அழகு என்கிற இலக்கிய வாசிப்பின் முதல் புள்ளிக்கு வந்திருக்கிறேன். இடையே ஒரு பெரிய வட்டப் பாதையில் பயணித்திருக்கிறேன்.
இந்த நூல் 1931ல் கன்னடத்தில் எழுதப்பட்டது. எளிமையே சிவராம காரந்தின் பலம் என்று, சோமனின் உடுக்கைக்கு எழுதப்பட்ட முன்னுரையில் இருக்கிறது. கன்னடத்தில் நான் நேரடியாக வாசித்ததில்லை. ஆனால் மொழிபெயர்ப்பின் எளிமை அசரடிக்கிறது. தி.சு.சதாசிவம் பாராட்டுக்குரியவர். மூல நூலின் எளிமையும் மொழிபெயர்ப்பின் லாகவமும் இணைந்துள்ளது இந்த சிறிய ‘சோமனின் உடுக்கை’ புத்தகத்தில். கன்னடத்தில் சோமன துடி.
கடைசியில் சோமன் கிறித்துவத்துக்கு மதம் மாற முடிவெடுத்துப் போகும்போது, பல வித யோசனையில் இருக்கும்போது, எதிர்ப்படும் குல சாமியின் முன்னால் அவனையே அறியாமல் வழக்கம்போல் மண்டி போட்டுக் கும்பிடுகிறான். அவனுக்குள் கேள்விகள் அலையடிக்கின்றன. ஒரு நிலத்துக்காகவா மதத்தைக் கைவிடுவது என்று முடிவெடுத்து வீடு திரும்புகிறான்.
சோமன துடி கன்னட நாவல் திரைப்படமாக வெளியானது. அதில் பாதி மட்டும் யூ டியூப்பில் கிடைக்கிறது. மிக நன்றாகவே படமாக்கி இருப்பார்கள்.
—
தொடர்ந்து ஏழு நாட்களுக்கு நாள்தொறும் ஒரு புத்தகத்தின் அட்டையைப் பகிர வேண்டும். அது குறித்து எதுவும் பேச வேண்டியது, பகிர வேண்டியது இல்லை. சவாலைத் தொடருமாறு சிலரை அழைக்கவேண்டும்.
Day 2
I have accepted an interesting challenge to post the cover of 7 books. Thank you
I suggest, one book per day for 7 days, no explanations, no reviews, just covers. Each day
I may ask a friend to take up the challenge! Let’s promote literacy and a book list!
Today I nominate: Ethirajan Srinivasan


