அர்ஜூன் ரெட்டி – ஒரு முறை பார்க்கலாம். விஜய் வாழ்ந்திருக்கான். ரத்தமும் சதையும் காதலும் காமமும் கலந்த ஒருத்தனாலதான் இப்படி இயக்கமுடியும். 3 மணி நேரப் படத்தில் 30 முத்தக்காட்சியாவது இருக்கும். கமல் ரசிகர்கள் தெளியவும். படம் கொஞ்சம் நீளம். கடைசியில் சுஜாதாவின் கனவுத் தொழிற்சாலையில் வரும் கிளைமாக்ஸோ என நினைத்தேன். அதற்கும் கடைசியில் கற்பை நிலைநாட்டிவிட்டார்கள். தெலுங்கானாகாரன்கிட்ட வெச்சிக்காதன்னு தெலுங்குக்காரர்கள் பேசும் வசனம் – ஒரே மொழி இரு மாநிலம் என்ற நிலையில் இதை எப்படி எடுத்துக் கொள்வார்கள்?