நீண்ட நாள்களுக்குப் பின்
புரட்டியபோது
அடையாளம் தெரியாமல்
சிதைவுற்றிருந்தது
பழம்புத்தகத்தின் பக்கங்களில்
தடங்கள்
எண்களை இணைத்து
சித்திரம் கூட்டுதல் போல
கோடுகளை ரொப்ப
புதிய தடங்கள்
காற்றெங்கும்
தீராத ஒலிகளை நிரப்பி
என் காலடி மண்ணை
அரித்துக்கொண்டோடுகிறது நதி
19
Jan 2008
நதியின் பக்கங்கள் – கவிதை
ஹரன் பிரசன்னா |
Comments Off on நதியின் பக்கங்கள் – கவிதை