கவனம் ஈர்க்கிறது
முன்னெப்போதோ ஒரு கணத்தில்
மலர்ந்துவிட்ட பூ,
நிறமிழந்து
மணமிழந்து
தேனீக்களின் கவனமிழந்து
காம்பறுத்து
சிதறிய சருகுகளாய்
மென்காற்றிலாடி
கீழே விழும்போதும்.
14
Feb 2004
இரண்டாம் கவனம் – கவிதை
ஹரன் பிரசன்னா |
Comments Off on இரண்டாம் கவனம் – கவிதை